ஸ்ரீமுஷ்ணத்தில் த.வீ.செ மேல்நிலை நூற்றாண்டு பள்ளியின்முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி வகுப்பறைக்குத்தேவைப்படும் சில பொருள்களை வழங்கினர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 July 2023

ஸ்ரீமுஷ்ணத்தில் த.வீ.செ மேல்நிலை நூற்றாண்டு பள்ளியின்முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி வகுப்பறைக்குத்தேவைப்படும் சில பொருள்களை வழங்கினர்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் த.வீ.செ மேல்நிலை நூற்றாண்டு கொண்டாடிய பள்ளியில் 1992 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து, தாங்கள் பயின்ற பள்ளிக்கு உதவி செய்ய முடிவு எடுத்தனர், இந்த நிலையில் whatsapp குழு அமைத்து இதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் இருக்கைகள், நூலகம் ஆகியவற்றை பள்ளிக்கு வழங்கி மகிழ்ந்தனர்.


ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் நூலகத்தை ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலகத்தை பள்ளி செயலர் திரு  N.V.செந்தில்நாதன் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு இவ்வாறான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் எனவும் தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment