கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 July 2023

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மாவட்ட ஆட்சியர் தகவல்.


வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிப்பார்க்கும் பணி குறித்து கடலூர் ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளதாவது 01-01-2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் 2024-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்த்திடும் பணியினை மேற்கொண்டு, எதிர் வரும் 05.01.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளது. 

இதன் ஒரு பகுதியாக பொது மக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விபரங்களையும் சரிபார்த்திடும் பொருட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்திடும் பணி 21.07.2023 (வெள்ளி) முதல் தொடங்கி எதிர் வரும் 21.08.2023 (திங்கள்) அன்று வரை நடைபெறவுள்ளது. 


மேற்படி சரிபார்க்கப்பட்ட விபரங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்து தொடர் நடவடிக்கையாக 22.08.2023 முதல் 29.09.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம், பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


எனவே, கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும், மேலும் 100 % தூய்மையாகவும், துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விபரங்களை அளித்து, ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*/