அவ்வறிப்பின்படி 2023ஆம் ஆண்டு சூன் 03ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா தொடர்பில் கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 25.07.2023 அன்று கடலூர், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டுபேரைத் தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000/-வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.
அவர்தம் தலைமையாசிரியர்கள் பள்ளித் மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில் / அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 24.07.2023-இக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள்விழா பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் பின்வருமாறு: பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகள் கலைத் தாயின் தவப்புதல்வன், முத்தமிழறிஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி.
கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகள் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் திராவிடச் சூரியனே, பூம்புகார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூக நீதி காவலர் கலைஞர்.
பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 02.30 மணிக்கும் தொடங்கப்பெறும். இப்போட்டிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment