கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை கேட்பு கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 July 2023

கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்.


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர். அ. அருண் தம்புராஜ்  தலைமையில் நடைபெற்றது. 


கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறை மூலம் மீன்வளர்ப்பு தொடர்பான கண்காட்சி விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக கரும்பு பயிரை பாதிக்கும் பொக்கபோயிங் நோயினை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பச்செய்திகள் விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் அவர்களால் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து, கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த தெரிவித்த குறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வேளாண்மை மற்றும் அனைத்து துறை முதன்மை அதிகாரிகளுடன் விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகள் சாத்தியக்கூறு அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பதிலை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இணை இயக்குநர் இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை பொ.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) .சு.இரவிச்சந்திரன், வேளாண் உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள் மற்றும் 14 வட்டார விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

*/