கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அறிவுரையின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா தலைமையில் சைபர் கிரைம் போலீசார் 19.07.2023 தேதி கடலூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு செல்போனின் தீமைகள் பற்றியும், செல்போன் மூலம் பல்வேறு வகையான ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், மேலும் ஓ.டீ.பி எண்ணை யாரிடமும் சொல்ல கூடாது, எக்காரணம் கொண்டும் தேவையில்லாத லிங்க்குக்கு செல்ல வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சைபர் குற்றங்கள் சம்பந்தமாக ஏதேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் இணையதளத்தை www.cybercrime.gov.in பற்றியும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment