நந்தனார் சென்று வழிட்ட சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசலை திறக்க வேண்டும் கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம் .என். ராதா கோரிக்கை! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2023

நந்தனார் சென்று வழிட்ட சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசலை திறக்க வேண்டும் கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம் .என். ராதா கோரிக்கை!


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஏ அருண் தம்புராஜ் ஐ  நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் நாயனார் என்கிற நந்தனார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா  வைத்தீஸ்வரன் கோவிலை அடுத்த ஆதானூரில் பிறந்தவர் சிவபெருமான் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அவருக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்ற பேராவலாக இருந்தது. ஆனால் சாதி கட்டுப்படுகளை எண்ணி வருந்தி, நாளைக்கு போவேன், நாளைக்கு போவேன் என்று ஒவ்வொரு நாளும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்ட நடராஜரை மனதிலேயே வணங்கி வந்தார்.


அதனாலே அவர் திருநாளை போவார் நாயனார் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அவர் சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசல் கோபுரம் வழியாக சென்று சிவபெருமானை தரிசனம் செய்ததாக வரலாறு கூறுகிறது. 1987 ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது திறக்கப்பட்டு இருந்தது. இந்த தெற்கு வாசல் வழி  கும்பாபிஷேகத்திற்கு பிறகு இதுவரை மூடப்பட்டுள்ளது. இந்த தெற்கு வாசல் மூடப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சுவரை தீண்டாமை சுவர் என்று கூறுவது வேதனைக்குரியது. எனவே அந்த வழியை திறக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் பொது நல அமைப்பினர் போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை.


தற்போது பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆணையிட்டதன் பேரில் கனக சபை (சிற்றம்பலம்) மேடை ஏறி பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டு வருகிறார்கள். இதற்கு டீச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதை கண்காணிக்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். பக்தர்கள் தொடர்ந்து கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.


அதேபோல் நந்தனார் சென்று வழிபட்டதாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாசல் வழியை உடனடியாக திறக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்து திறக்க வேண்டும் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது கடலூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஆர் சம்மந்தமூர்த்தி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

*/