கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரியக்குப்பம் கிராம பகுதியில் விக்கிரவாண்டி தஞ்சை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் பல்வேறு இரும்பு தளவாடப் பொருட்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு காவலாளி மார்ட்டின்ராஜ் (35) என்பவர் காவலுக்கு இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கே வந்த மர்மநபர்கள் இருவர் இரும்பு தளவாடப் பொருட்களை திருட முயன்றனர்.
இதனால காவலாளி மார்ட்டின்ராஜ் அவர்களை பிடிக்க முயன்ற போது காவலாளியை மர்ம நபர்கள் தாக்கிவிட்டுத் தப்பித்தனர்.இதில் காயமடைந்த காவலாளி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து பெரியக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்த ஜோதி (21) வீரமணி மகன் வீரபாண்டியன் (21) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இப்பகுதியில் சமீபத்தில் இந்த சாலையை ஒட்டி யுள்ள தனியார் இடத்தைச் சுற்றி போடப்பட்ட கம்பி வேலி மறுநாளே மொத்தமாக திருடிச்செல்லப்பட்டது. இதுபோன்ற திருட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதைத்தடுக்க வேண்டும் என இப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment