தமிழ் நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புதிட்ட செயலாக்கதுறை அமைச்சர் சட்ட பேரவையில் 30.03.2023 அன்று சுய உதவிக்குழுக்களில் உற்பத்தி பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவதற்கும், சந்தைபடுத்திடவும், "வாங்குவேர் விற்பனையாளர்" ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்திடவும் தெரிவிக்கப்படுகிறது.
நிபந்தனைகள் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், சுய உதவிக்குழுவின் தனிப்பட்ட உற்பத்தியாளராவும் இருக்கலாம் மற்றும் தனிநபர் தொழில் முனைவோர்களாவும், அன்றாடம் பொருள் உற்பத்தியாளர்களாகவும், சுய உதவிக்குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும். விற்பனையாளர்கள் தங்கள் பெயர், உற்பத்தி பொருட்களின் விபரம் மற்றும் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை வாங்குபவர்களும் (வர்த்தகர்கள்) மாவட்டத்திலுள்ள மேலாண்மை அலகு / மகளிர் திட்ட அலுவலகத்தில் 21.07.2023 முதல் 24.07.2023-க்குள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அருன் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment