பாரதிய ஜனதா கட்சி, கடலூர் மேற்கு மாநகரத்தின் சார்பாக அனைத்து வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற து.கடலூர் துறைமுகம் மணி கூண்டு அருகில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்தும், தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் தேர் அருகே தேரடி வீதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாநகரம் மேற்கு மாநகரத் தலைவர் ஜே. டி மூர்த்தி தலைமை தாங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் கோ சக்திவேல் மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி பெருமாள் மாவட்ட துணை தலைவர் மாவட்ட பிரிவு தலைவர் சங்கர் மற்றும் மாநில, மாநகர, மாவட்ட ,ஒன்றிய, அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment