இந்த லயன் சங்கக் கூட்டத்தின் மூலமாக இப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்க மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டி என தனித் திறன் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களின் திறமையைப் பாராட்டி பல்வேறு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டது.
தாய் தந்தையற்ற மாணவி ஒருவ ருக்கு அவரின்படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக பொருளாளர் ஏ என் ஜி லோகநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு லயன்ஸ்உடனடி தலைவர் அன்பழகன், இரண்டாம் துணை ஆளுநர் ராஜா சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட ஆளுநர் கீதா கமலக்கண்ணன், மாவட்ட மாநாடுகள் தலைவர் அகர்சந்த், தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சாலை கனகதாரன், மாவட்டத் தலைவர் தீபக், மண்டலத் தலைவர் மண்டலம்10 சாமுண்டீஸ்வரி, வட்டாரத் தலைவர் வட்டாரம் 01 கரியப்பா, மண்டல ஒருங்கிணைப்பாளர் மண்டலம் 10 சின்னமணி ஆகியோர் கலந்து கொண்டனர், 2023- 24 தலைவர் சௌந்தர் ராஜன் ஏற்புரையாற்ற 2023-24 செயலாளர் பிரவின் சாமுவேல் நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மேலும் முதல் துணைத் தலைவர் வேணுகோபாலன், இரண்டாம் துணைத் தலைவர் ராஜசேகரன், சங்க உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் தாமரைச்செல்வன், சங்க சேவைப் பணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். மணிமாறன், மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன் இளங்கோவன் இயக்குனர்கள் டாக்டர் சிவனேசன், தண்டபாணி, கலியமூர்த்தி, சரவணன், விஸ்வநாதன், கலைச்செல்வன் சங்க அட்மின் G சண்முகம், சங்கத்தின் பெருமைமிகு உறுப்பினர்கள் ராமலிங்கம், சாந்திதேவபெல், சாமுவேல், தில்லை, கொளஞ்சிநாதன், மணிவண்ணன், மஹாகிருஷ்ணன், அண்ணாமலை, பரணிதரன், சௌந்தர்ராஜன், அரவிந்த்குமார், ஜெயந்தி, சங்கரி,தீபா ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment