கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் அச்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 250 க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட கோவிலானூர் ஊராட்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதேபோன்று கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சாவடி பஸ் நிலையம், தோட்டப்பட்டு குமராபுரம், கள்ளப்பாக்கம், காராமணி குப்பம், நடுவீரப்பட்டு, மணப்பாக்கம், கட்டியம்பாளையம், கொளப்பாக்கம் போன்ற பல்வேறு கிராமங்களில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாநகர ,ஒன்றிய, நகர, பேரூராட்சி, மற்றும் பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment