பேரூராட்சிக்குக் கடந்த பல மாதங்களாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பாதிப்பு, தங்களுக்கான ஊதியம் முறையாக கிடைக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை இங்கு வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் பலமுறை பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரிடம் தெரிவித்து வந்தனர்.
ஆனால் புவனகிரி பேரூராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று கூறுகின்றனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இன்று நிரந்தர செயல் அலுவலரை நியமிக்கக் கோரியும் ,நிரந்தர மேஸ்திரியை நியமிக்கக் கோரியும் கோரிக்கை வைத்தும் தங்களுக்கான சம்பளத்தை சரியாக வழங்கிட வேண்டும், பிடித்தம் செய்த சம்பளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தற்போது புவனகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தை ஆரம்பித்து மூன்று மணி நேரத்தைக் கடந்தும் இதுவரை எந்த அதிகாரியும் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தற்போது புவனகிரி பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment