வடலூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 July 2023

வடலூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வடலூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னாள் ரோட்டரி ஆளுநர் மணி, வைத்தியநாதன் மற்றும் உதவி ஆளுநர் இந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


இதில் புதிய வடலூர் ரோட்டரி தலைவராக ஆசிரியர் ராமமூர்த்தி அவர்களும் செயலாளராக முனுசாமி அவர்களும் பொருளாளராக ராஜா சுதாகர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்று கொண்டனர், இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் வடலூர் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகள் மற்றும் சிறந்த மருத்துவர் ஆசிரியர் ஆகியோருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது மேலும் இரண்டு பெண்களுக்கு முந்திரி கொட்டை உடைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.


ரேக்ஸ் அமலன், எட்வர்டு பிராங்கிளின், அரங்கநாதன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில் இறுதியாக செயலாளர் லூர்து சாமி அவர்கள் நன்றி உரை வழங்கினார்.

No comments:

Post a Comment

*/