இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அச்சத்துடன் தினமும் பயணித்து வருகின்றனர் மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய பகுதி என்பதால் பேரூராட்சி நிர்வாகம் இதன் மீது கவனம் கூர்ந்து உடனடியாக தாழ்வாகவும் ஆபத்தான நிலையில் உள்ள ஸ்விட்ச் போரடு மற்றும் மீட்டர் பாக்ஸை சரி செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.
இதன் அருகாமையில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் மீன் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அவல நிலை தொடர்கிறது, மேலும் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மூக்கை பொற்றிய வாறு தினமும் கடந்து சென்று வருகின்றனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் இங்கு காத்திருந்து புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
புவனகிரி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள நிலையில் பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதியினர் குமுறுகின்றனர் மேலும் மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் கூர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உயிர் சேதம் ஏற்படும் முன் வாழ்வாக உள்ள மின்சார சுவிட்ச் மற்றும் மீட்டர் பாக்ஸ்களை சரி செய்து சுகாதார சீர்கேட்டினால் நோய் தொற்று பரவும் வகையில் மீன் கழிவுகள் மற்றும் கழிவு நீரை ஆற்றில் வெளியேற்றம் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment