இதில் சிறுவன் தர தர என இருசக்கர வாகனத்தோடு சேர்த்து இழுத்து வரப்பட்டு உடல் நசுங்கி குடல் வெளியே வந்து உடம்பில் உள்ள எலும்புகள் முறிந்து கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளான் உடனடியாக. டிப்பர் லாரி ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே இறங்கி வேகமாக ஓடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் உயிரிழந்த சிறுவன் சந்தோஷ் புவனகிரி திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவன் என்பதும் டிப்பர் லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது மேலும் இந்த புவனகிரி பகுதியில் இது போன்ற டிப்பர் லாரியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உடல் நசுங்கி உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது எனவே இது போன்ற விபத்துகளை தடுத்திட உரிய நடவடிக்கை வேண்டும் என்பதே புவனகிரி வாழ் பொது மக்களின் பலத்த கோரிக்கையாக இருந்து வருகிறது.
No comments:
Post a Comment