இவர் தனது இளம் வயதிலிருந்தே அறிவியல் துறை சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்டு, கண்காட்சிகளில் பங்கேற்று பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தற்போது இவரின் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள், விழுந்துவிட்டால் அவர்களை உடனடியாக உயிரோடு மீட்பதற்கான சாதனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு இதற்காக டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்தநாளில் ஹார்ட்ஃபுல்னஸ் நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்வில் இதனை பாராட்டும் விதமாக தமிழக அளவில் சிறந்த கண்டுபிடிப்புக்காகவும், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளதற்காகவும் இளம் விஞ்ஞானிவிருதினை பெற்றுள்ளார்.
இந்த விருதானது மாணவர் சலேத்ஹாரிசனுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனையடுத்து இதனையறிந்த துறிஞ்சிக்கொல்லை அதிமுக ஊராட்சி மன்றத்தலைவர் மயில்வேல், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளரும் , புவனகிரி ஒன்றிய பெருந்தலைவருமான சி.என். சிவப்பிரகாசம் அறிவுறுத்தலின் பேரில்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதிமுக சார்பில் சால்வை அணிவித்து கவுரவித்து இளம்விஞ்ஞானி சலேத்ஹாரிசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.இவர் மேன்மேலும்
இன்னும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து எங்கள் கிராமத்திற்கு புகழ் சேர்த்துஇந்த நாட்டுக்காக அர்ப்பணிப்போடு வாழ்ந்திடவேண்டும் எனவும் பாராட்டுக்கள் தெரிவித்தார்.. இந்த நிகழ்வின்போது அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் ரேவதி, மாணவரின் பெற்றோர் மற்றும் துறிஞ்சிக்கொல்லை கிராமத்தினர்கள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment