தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் குலாலர் சங்கத்தினரின் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 July 2023

தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் குலாலர் சங்கத்தினரின் கோரிக்கை.


கடலூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம். இதன் மாநிலச் செயலாளர் பொறுப்பில் ஏ கே. ராஜா என்பவர் இருந்து வருகிறார். அத்துடன் மாநில குலாலர் சங்க பொறுப்பும் வகித்து வருகிறார். அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் மண்பாண்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து கேட்டு வருகிறார். 


அப்படி கேட்கப்பட்டதில் அவர்கள் தெரிவித்த கருத்து பின்வருமாறு; ஒட்டுமொத்த தமிழக குலாளர்களும் மண்பாண்டம் செய்வதற்கு ஒரே மாதிரியான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தின் தலைவரை நியமிக்கும் போது அந்த தொழிலைப் பற்றி முற்றும் முழுதாக அறிந்த குலாளர் சமுதாயத்திலிருந்து ஒருவரையே நியமிக்க வேண்டும்  என்றும் தங்களது மேலான கருத்துக்களை எல்லோருமே ஒரு மனதாகக் கூறி வருகிறார்கள் என ஏ கே. ராஜா அவர்கள் குறிப்பிடுகிறார். 

No comments:

Post a Comment

*/