ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டைகீழ்பாதியில் ஏரி தூர் வாருவதில் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக மண் வெட்டுவதாக கிராம மக்கள் புகார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 July 2023

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டைகீழ்பாதியில் ஏரி தூர் வாருவதில் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக மண் வெட்டுவதாக கிராம மக்கள் புகார்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தில் புத்தேரி உள்ளது. 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதும் மிகுந்த ஆழம் கொண்டதுமான இந்த ஏரி தற்போது மண் மேடாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் விவசாயத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கும் நீண்ட காலமாகவே ஏரியை தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.


இந்நிலையில் கிராம மக்களின் கடும் முயற்சிக்குப் பிறகு ஏரி தூர்வாரப்படுகிறது. சில வருடங்களுக்குப் பிறகு தூர்வாரப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் கனரக ஜேசிபி வாகனங்களைக் கொண்டு ஒரே இடத்தில் குறிப்பிட்ட ஆழத்திற்கு மேலும் மண் அள்ளப்பட்டு வருகிறதாகவும்இது அரசு உத்தரவான மூன்று மீட்டரை விட பல அடி கூடுதலாக உள்ளதெனவும் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 


உடனடியாக உரிய அதிகாரிகள், மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மண்ணை வெட்டி அள்ளிக் கொண்டிருக்கும் இடத்தினை பார்வையிட்டு அதன் நீளம் அகலம் ஆழம் இவற்றை அளவிட்டு இதனை மேற்பார்வையிட்டு அரசின் அளவீட்டின் படி தான் மண் வெட்டப்படுகிறதா, கிராம மக்கள் கூறும் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை ஆய்வு செய்த பிறகே மீண்டும் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றுஇக்கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/