கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நான்கு சாலைகளிலும் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு நான்கு சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும் விதமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வள்ளலார் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று நான்கு சாலைகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள வியாபாரிகள், வர்த்தகர்கள் வரும் செவ்வாய்கிழமைக்குள் (25.07.2023) தாங்களாகவே அகற்றி கொள்ள கால அவகாசம் வழங்கி அறிவுறுத்தப்பட்டது, இக்கூட்டத்தில் வடலூர் நகர மன்ற தலைவர் அண்ணன் சு.சிவக்குமார் அவர்கள் நகர கழக செயலாளர் த.தமிழ்ச்செல்வன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment