தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி குண்டு சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 14.6.2023 முதல் 17.6.2023 வரை 4 நாட்கள் நடைபெற்றது. நெய்வேலி நகர காவல் நிலையம் பெண் தலைமை காவலர் திருமதி. ராஜேஸ்வரி மற்றும் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. நதியா ஆகியோர் இன்சாஸ் ரைபிள் துப்பாக்கி சுடும் பெண்கள் பிரிவில் பங்கேற்று ஒட்டுமொத்த கேடயம் முதலிடத்தை வென்றார்கள்.
தமிழ்நாடு 48 வது மாநில அளவிலான சிவில் துப்பாக்கி குண்டு சுடும் போட்டி 16.7.2023 தேதி மதுரையில் நடந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண் தலைமை காவலர் திருமதி. R. ராஜேஸ்வரி அவர்கள் பங்கேற்று ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்று தென்னிந்திய அளவிலான துப்பாக்கி குண்டு சூடும் போட்டியில் தேர்வாகி உள்ளார். பதக்கம் பெற்ற பெண் காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை ஆய்வாளர் அருட்செல்வன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment