சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி பிரச்னையை பார்வையிட வளையமாதேவி கிராமத்திற்கு செல்லும் வழியில் விவசாய சங்கத் தலைவர் போலீசாரால்தடுத்து நிறுத்தப்பட்டார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 July 2023

சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி பிரச்னையை பார்வையிட வளையமாதேவி கிராமத்திற்கு செல்லும் வழியில் விவசாய சங்கத் தலைவர் போலீசாரால்தடுத்து நிறுத்தப்பட்டார்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை, என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பார்வையிட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி ஆர் பாண்டியன் வருகை தந்தார்.

அப்போது அவரை அவ்விடத்திற்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக ஐந்து கிலோமீட்டர் முன்பாக தடுக்கும் விதமாக சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அவரை  தடுத்து நிறுத்தினர். நான் விவசாயிகளை சந்திக்க செல்வதற்கு ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? இந்தியாவில் தானே இருக்கிறது வளையமாதேவி கிராமம் என்று காவல்துறையரிடம் கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியாமல் திணறினர். 


பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது என்எல்சி நிர்வாகம் நம் நாட்டினுடைய வளர்ச்சிக்காக உதவுகிறோம் என்ற பெயரில் விவசாயிகளையும் பொது மக்களையும் வளம் கொழிக்கும் விளைநிலங்களையும் அழித்துவிட்டு தான் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூற நான் செல்கிறேன். அவ்வாறு சென்றால் அங்கு நடப்பதை இந்த உலகுக்கு தெரிவிக்க முடியும். உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள்? என போலீசாரிடத்தில் அவர் கேட்க போலீஸாரோ இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தனர். மேலும் பேசிய அவர் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தால் கடந்த நான்கு நாட்களாக வளையமாதேவி கிராமத்தில் நெல் வயல்களை அழித்து  என்எல்சி நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டதைக்  கண்டு விவசாயிகளும் கிராம மக்களும் கண்ணீர் விடும் நிலையில் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/