இந்த செஸ் போட்டியில் 10 வயது, 13 வயது,15வயதுடைய, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 180 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாலையில் ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் ரூப வேல் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ப .சரளா மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கி சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக தமிழ் படைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் தி.இராஜ மச்சேந்திர சோழன் முன்னிலை வகித்தார் .செஸ் போட்டியின் நடுவராக அனிதா ரூபவேல் செயல்பட்டார்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற 90 மாணவர்களுக்கு பரிசுகள் சான்றுகள் வழங்கப்பட்டன. மேலும் செஸ் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment