இதனை தொடர்ந்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என் எல் சி நிறுவனத்தை வெளியேறுமாறு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இதற்கு போலீஸ் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், கடந்த 28.7.2023 ஆம் தேதி 12 மணிக்கு பாமகவினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே திரண்டு வந்து ஆர்ப்பாட்டமும், கண்டனம் கோஷங்களும் முழங்கினர்.
முடிவில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட என் எல் சி ஆர்ச் கேட்டில் நுழைய முயற்சி செய்தபோது தடுத்து நிறுத்திய காவல் துறையினர் மீது பாமக தரப்பினர் தண்ணீர் பாட்டில் வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தண்ணீர் பீச்சியும், கண்ணீர் புகை வீசியும் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதி சூழ்நிலைக்கு கொண்டுவந்து, சட்டம் ஒழுங்கை பாதுகாத்தனர்.
இந்நிகழ்வில் காவல்துறைக்கு சொந்தமான 3 வாகனங்கள் கலவரகாரர்களால் சேதப்படுத்தப்பட்டது. 20 காவல்துறையினர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். பின்பு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக கட்சியினர் 197 நபர்களை தடுப்பு நடவடிக்கையாக கைது செய்து, வடகுத்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு, பின்னர் மாலை விடுவிக்கப்பட்டார்கள்.
அதேபோல் வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முற்பட்ட சுமார் 2000 பாமகவினரை தடுப்பு நடவடிக்கையாக கைது செய்து பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்து. மேலும் மேற்படி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் உள்ளிட்ட 32 நபர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுள்ளனர். பாமக தலைவர் கைதை தொடர்ந்து 4 இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.
மேலும் கடந்த 26.7.2023 மற்றும் 28.7.2023 தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குளில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment