அப்போது ஒரே ஒரு சாமியானா மட்டுமே அமைக்கப்பட்டு சிலரை நாற்காலியில் அமர வைத்தனர்.பலர் தாங்கள் வந்த வாகனங்களிலும் தரையிலுமே அமர்ந்திருந்தனர். அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வரிசையில் நின்ற கொடுமை இங்குதான் நடந்தது. இயல்பான மனிதர்களாக இருந்தால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வரிசையில் நிற்கலாம். ஆனால் இங்கு மதிப்பீட்டு முகாமிற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகளில் 10% 20% முதல் 50 சதம் 60% மற்றும் முற்றிலும் பாதிப்பு என பல்வேறு தரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வருகை தந்திருந்தனர்.
அவர்களுக்கான ஒரு கனிவான உபசரிப்பு ஏதுமில்லாமல் மாற்றுதிறனாளிகளை வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருத்தராக உள்ளே வர செய்து மனுக்களை பெற்றனர். இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மாற்று திறனாளிகளுக்கான வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை விட்டு கீழே இறங்கவே சிரமப்பட்டனர். தவழ்ந்து சென்று அந்த வரிசையில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும் அவர்கள் இது குறித்து தெரிவிக்கும் போது அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளை ஒரே இடத்தில் அமரவைத்து அங்கு வந்து மனுக்களை பெற்று ஆய்வுகள் மேற்கொண்டால் என்னைப் போன்ற ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும். எல்லோரும் தங்களது குறைகளை எளிதாகவும் சிரமம் இல்லாமலும் தெரிவிக்க முடியும் என தெரிவித்த அவர்கள் இதுபோன்று கருணை இல்லாமல் நடந்து கொள்வது எங்களுக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது என அவர்கள் கண்கலங்கி கருத்து தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் இயல்பான மனிதர்களில் இருந்து மாறுபாடு உள்ள மனிதர்கள். அவர்களையும் எந்த குறையும் இல்லாத மனிதர்களைப் போலவே வரிசையில் நீண்ட நேரம் நிற்க வைத்து மனுக்களை வாங்கியதற்குப் பதிலாக அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே வந்து மனுக்களை வாங்கியிருக்கலாம் என்பதே இதைப் பார்த்தவர்களின் எண்ணமாக இருந்தது.
No comments:
Post a Comment