விருத்தாசலத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் மற்றும் திரு கொளஞ்சியப்பர் கோவிலில் இலவச திருமணம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 July 2023

விருத்தாசலத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் மற்றும் திரு கொளஞ்சியப்பர் கோவிலில் இலவச திருமணம் நடைபெற்றது.


தமிழக சட்டமன்ற அறிவிப்பின் படி திருக்கோயில்களில் இலவச திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்  ஆலயத்தில் மூன்று ஜோடிகளுக்கும், அருள்மிகு ஸ்ரீ கொளஞ்சியப்பர் ஆலயத்தில் ஐந்து ஜோடிகளுக்கும் 4கிராம் தாலி, வேட்டி சட்டை, புடவை, பீரோ, உள்ளிட்ட தலா 8 ஜோடி மணமக்களுக்கு ரூ 50ஆயிரம் மதிப்புள்ள வீட்டிற்கு தேவையான சீர்வரிசை இலவசமாக வழங்கி மாவட்ட இணை ஆணையர் பரனிதரன் தலைமையில் நடைபெற்ற இலவச திருமணத்திற்கு  உதவி ஆணையர் சந்திரன்,  செயல் அலுவலர்கள் மாலா, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இதில் சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகர மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி தமிழ்ச்செல்வி சிவப்பிரகாசம், ஒன்றியம் செயலாளர் கனககோவிந்தசாமி. ஒன்றிய துணை செயலாளர் தர்ம.மணிவேல், வழக்கறிஞர் அருள்குமார், நகரமன்ற உறுப்பினர் சிங்காரவேலு , திட்டக்குடி ஆய்வாளர் தமிழ்செல்வி, ஸ்ரீமுஷ்ணம் ஆய்வாளர் லட்சுமி நாராயணன், விருதகிரிஸ்வரர் திருக்கோயில் மேலாளர் பார்த்தசாரதி, மற்றும் எழுத்தர் ஆனந்தகுமார்.காங்கிரஸ் நகர தலைவர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/