கடலூர் மாவட்ட காவல்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து தேவணாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமையில் நெகிழி பொருட்கள் அகற்றி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. வெள்ளி கடற்கரையில் நெகிழி இல்லாத தூய்மையான கடற்கரையாக இருக்க வேண்டி காவல்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினருடன் தூய்மை பணி மேற்கொண்டனர்.
வெள்ளி கடற்கரை, அனைத்து மக்களும் துள்ளி விளையாடும் மகிழ்ச்சியான கடற்கரை, வெள்ளி கடற்கரை தூய்மையை ஒவ்வொருவரும் பேணி பாதுகாப்போம், நமது குப்பை நமது பொறுப்பு, ஒவ்வொருவரும் பொறுப்பேற்போம், அழகிய உலகத்தை உருவாக்குவோம், கழிவுகள் இல்லாத உலகத்தை உருவாக்குவோம். எங்கும் தூய்மை எதிலும் தூய்மை, ஒழிப்போம் ஒழிப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என முன்னதாக உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, காவல் ஆய்வாளர்கள் குருமூர்த்தி, உதயகுமார், மைக்கேல் இருதயராஜ், திருமதி. மகேஸ்வரி, அருட்செல்வன் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment