கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி-விருத்தாசலம் சாலையில் சேத்தியாத்தோப்பு பால்பண்ணை அமைந்துள்ளது.இதன் அருகில் உள்ள சாலையில் புவனகிரிப்பகுதியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பக்கவாட்டில் இணைப்புச்சாலையில் அதிவேகமாக வந்த மற்றொரு கார் எதிர் பாராமல் பக்கவாட்டில் மோதியதில் ஒருகாரில் வந்த ஓட்டுநர் மற்றும் மற்றொரு காரில் வந்த நான்கு பேர் என இரண்டு கார்களில் வந்த மொத்தம் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முக்கியமாக நான்கு வழிச்சாலையில் வரும் இணைப்புச் சாலையில் வேகத்தடை இல்லாததே விபத்துக்கு காரணம் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இதுபோன்று பல விபத்துக்கள் நடந்துள்ளது என குறிப்பிடும் அவர்கள் நெடுஞ்சாலை துறையினர் இணைப்பு சாலைகளில் பல அடுக்கு வேகத்தடை அமைத்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்..
No comments:
Post a Comment