கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசுக் கட்சி(அத்வாலே) யின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 July 2023

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசுக் கட்சி(அத்வாலே) யின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசுக் கட்சி(அத்வாலே) யின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,  ஆர்ப்பாட்டத்திற்கு  ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட செயலாளர் டாக்டர். மதியழகன் தலைமை தாங்கினார் மாவட்ட அமைப்பாளர் கவின்கோ, மாவட்ட ஆலோசகர் ராஜ்குமார், கட்சியின் கடலூர் ஒன்றிய தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர் டாக்டர் முத்தரசன் வரவேற்புரையாற்றினார்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் மாற்று முறை மருத்துவம் படித்த தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர்த் தொட்டியில் மலத்தை கலந்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க இலவச பயிற்சி மற்றும் வங்கி கடன் வழங்க வேண்டும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாமன்ற உறுப்பினர் சக்தி வேல், குணசேகரன்,அரசு ரங்கேஷ், காரைக் கண்ணன், விஜயகுமார் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/