கடலூரில் இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் 75 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கிளையின் சார்பாக கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது முகாமை கடலூர் கிருஷ்ணசாமி கல்வி குழுமத்தின் தலைவரும் கடலூர் ரத்ததான சங்கத்தின் செயலாளர் மருத்துவர். ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
இதில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பொது மேலாளர் இளங்கோ, அருண் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர் மேலும் கடலுரை சேர்ந்த பட்டய கணக்காளர்களும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு ரத்தம் தானம் செய்தார்கள் இந்நிகழ்ச்சியில் பட்டய கணக்காளர்கள் ராமலிங்கம், குமரகுரு செல்வம், ரவிச்சந்திரன், சண்முகம், திருமதி. வைஜெயந்தி, சதீஷ்குமார் புதுவை கிளையின் துணைத் தலைவர் ரஞ்சித்குமார் செயலாளர் குஷால் ராஜ் பொருளாளர் மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணா மருத்துவமணை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தவர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.
No comments:
Post a Comment