கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் -12 இல் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் , அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை கானெலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கான இயந்திரங்கள் தொழிற்பெயர்ச்சி கூடம், நான்கு வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறை, கணினி அறை, பெண்கள் மற்றும் ஆண்கள் கழிவறை ஆகியவை ரூபாய் 3 கோடியே 73 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்நிகழ்வில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், என்எல்சி இந்தியா லிமிடெட் தலைவர் பிரசன்ன குமார் மேட்டுப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பரமசிவன், என்எல்சி நகர நிர்வாக முதன்மை பொது மேலாளர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பின்னர் தொழில்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற் கூடத்தை பார்வையிட்டனர்.
நிகழ்வில் அரசு அதிகாரிகள், தொழில்ற்பயிற்சி நிலைய மாணவர்கள் பயிற்றுநர்கள் ஆகியோர் உடனிருந்தனர்
No comments:
Post a Comment