கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கஸ்பா. சி. ஆலம்பாடி கிராமத்தில் வயல்வெளிப் பகுதியின் நடுவில் ஒரு மின்கம்பம் இருந்து வருகிறது.இந்த மின் கம்பம் குடியிருப்புகள் மற்றும் மின்மோட்டாருக்கான மின்சாரத்தினை எடுத்துச் செல்கிறது .இவ்வாறான நிலையில் மின் கம்பத்தின் உச்சியில் சிமெண்ட் காரை பெயர்ந்து கம்பியை ஆதாரமாகக் கொண்டு கம்பம் நிற்கிறது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள், அப்பகுதியில் ஆடு மாடுகள் மேய்ப்போர் எனப் பலரும் அச்சம் கொண்டுள்ளனர். உடனடியாக மின்வாரியத்துறைஇதில் கவனம் செலுத்தி சேதம் ஏற்பட்ட இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் ஒருத்தி இணைப்பு கொடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment