எனவே கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து அவர்களோடு களத்தில் இறங்கி அதிகாரிகள் செயல்பட முன்வர வேண்டும். பம்பு செட்டு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார சட்ட மசோதா 2021 வாபஸ் வாங்க வேண்டும் கடந்த காலத்தை போன்று முத்தரப்பு கூட்டத்தையும் ஆலை பேரவைக் கூட்டத்தையும் நடத்த வேண்டும் எத்தனால் ஆலை கூட்டு மின் உற்பத்திப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் நிலைக்குழு உறுப்பினர் ஆதிமூலம், மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச்செல்வம், தேசிய தொழிலாளர் சங்கபுகழேந்தி, செயலாளர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் ரங்கசாமி, கார்த்திகேயன், சீமான் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், புரட்சிமணி, லலிதா பாலகுரு, கோட்டை செயலாளர் ஞானசபாபதி உள்ளிட்ட ஏராளமான கரும்பு விவசாயிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியாக பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி உரையாற்றினார்.
No comments:
Post a Comment