கடலூர் மாவட்டம் அண்ணாகிராம ஒன்றிய அலுவலகத்தில் கடலூர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் புகாரின் பேரில் இன்று மதியம் 1மணியளவில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் கணக்கில் வராத பணம் 3லட்சத்து 9ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். மேற்கண்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் தெறிவிக்கையில் அண்ணாகிராம ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. அதில் கடந்த 14.07.2023அன்று பல்வேறு பணிகளை மேற்கொள்ள 1கோடியே 30லட்சம் ரூபாய்க்கு ஒன்றிய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தனக்கு வேண்டியபட்ட ஒருசிலருக்கு மட்டும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணிகள் கிடைக்கப் பெற்றவர்கள் கொடுக்கும் கமிஷன் தொகையை பணிகள் கிடைக்காதவர்களுக்குபிரித்து கொடுப்பதாக தகவல்கள் கிடைத்ததின் அடிப்படையில் திடீர் என்று சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment