விரைந்து வந்து சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்புக் குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதும் தீயினால் எரிந்து சேதமானது. எதிர்பாராமல் வீடு மின் கசிவினால் தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து கருகி சாம்பலாயின . இந்த தீ விபத்தில் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.. செய்து வருகின்றனர். தீ விபத்தின் போது வீட்டினில் யாரும் இல்லாததால் உயிராபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து முதற்கட்டமாக வருவாய் துறை மூலம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment