அண்ணாமலை பல்கலைக்கழக கடைநிலை ஊழியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அசைம்பாவத சம்பவம் நடைபெறாமல் தடுக்க கடைநிலை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 July 2023

அண்ணாமலை பல்கலைக்கழக கடைநிலை ஊழியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அசைம்பாவத சம்பவம் நடைபெறாமல் தடுக்க கடைநிலை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து மிகவும் குறைவான ஊதியம் பெறும் துப்புரவாளர் கள் காவலர்கள் அலுவலக உதவியாளர்கள் போன்ற கடைநிலை ஊழியர்களை அவர்களின் சொந்த மாவட்டத்தில் இருந்து தொலைவிலுள்ள மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் அரசு துறையில் 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் மூலம் பணி அமர்த்தினார்கள் அவர்களின் ஊதியம் குறைவு என்பதால் தன் குடும்பத்தை விட்டு தனியே பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் தங்கி பணி புரிகின்றனர் மாதம் ஒருமுறை மட்டுமே தன் குடும்பத்தை காண சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர் இதனால் அவர்களின் பலர் தீவிர மன உளைச்சலில் தவிக்கின்றனர்.


இந்த நிலையில் தற்போது குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எருமபட்டி நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக கடைநிலை ஊழியர்  சீனிவாசன் அலுவலக உதவியாளர் 16-07-2023 அன்று தனியே தங்கி இருந்த வாடகை அறையில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார் அவர் தற்போது நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் எனவே தமிழக அரசு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


மேலும் இதுபோன்ற விருப்பத்தாக எத்தகைய நிகழ்வுகளும் இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க அண்ணாமலை பல்கலைகழகத்தில் இருந்து பணிநிரவல் செய்யப்பட்ட கடைநிலை ஊழியர்களிடம் கலந்தாய்வு நடத்தி அவர்களின் சொந்த மாவட்டம் அல்லது அருகாமை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று அண்ணாமலைப்பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொண்டனர் இதில் மாநில தலைவர் R குமரவேல், மாநில பொதுச் செயலாளர் K பன்னீர்செல்வம், மாநில பொருளாளர் A பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

*/