காவல்துறை கூடுதல் இயக்குனர் (சைபர் கிரைம்), சென்னை உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் வழிகாட்டுதலின்படி இணையவழி குற்றபிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா 17.07.2023ஆம் தேதி கடலுார் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பாக துண்டுப்பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுச்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க் யை ஓப்பன் செய்ய கூடாது, வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் புகைப்படம் பதிவிடக்கூடாது, போலியான செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டாம் ஆகிய இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் Www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment