சேத்தியாத்தோப்பு அருகேகுமாரக்குடியில்தீப்பிடித்து எரிந்து முற்றிலும்சேதம் அடைந்த வீட்டுக்கு மதிமுக மாவட்ட கவுன்சிலர் நிதியுதவி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 July 2023

சேத்தியாத்தோப்பு அருகேகுமாரக்குடியில்தீப்பிடித்து எரிந்து முற்றிலும்சேதம் அடைந்த வீட்டுக்கு மதிமுக மாவட்ட கவுன்சிலர் நிதியுதவி.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளசிவக்குமார்-வடிவுதேவி வீட்டில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீடு தீப்பிடித்துஎரிந்தது.  இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலைக்குச் சென்ற நிலையில் காலையில் இவர்களது வீடு பூட்டி இருந்தது. அப்போது அவர்களது வீட்டினுள்ளே இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்க்க, அந்நேரம் புகையுடன் தீயும் மளமளவென பற்றிஎரிந்து கொண்டிருந்ததைக் கண்டவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர். 


விரைந்து வந்த சேத்தியாத்தோப்பு  தீயணைப்புக் குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து முடிப்பதற்கு மொத்த விடும் சுத்தமாக எரிந்து சேதமானது.இந்த எதிர்பாராத தீ விபத்தில் வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அத்துடன் சில தினங்களுக்கு முன் மஞ்சள் நீராட்டு விழா செய்த இவர்களின் பெண்ணுக்கு பரிசாக வந்த பட்டுப் புடவைகளும் முழுவதுமாக  தீயில் எரிந்து கருகி சாம்பலாகியதை கண்டவர்கள் கண் கலங்கினர். 


இந்த தீ விபத்தில் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்கள்.தீ விபத்துக் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையறிந்த மதிமுகவின் கடலூர் மாவட்டக் கவுன்சிலர் எம் எஸ் கந்தசாமி உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறி அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களும் நிதி உதவியும்வழங்கினார். 

No comments:

Post a Comment