கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்களம்பேட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆனி மாதம் 5ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டி 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
தினமும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்று அம்மன் வீதியுலா நடைபெறும்,17ஆம் நாள் திருவிவிழாவான இன்று மங்களநாயகி அம்மன் கோவில் குளத்தில் இருந்து சக்தி கரகம் சுமந்து வந்து கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் காப்புகட்டிய பக்தர்கள் தீயில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர், நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள் பெண்கள் என அனைத்து பக்தர்களுக்கு நோய் நொடி இன்றி வாழவும் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும், சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஆயிரத்தற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவினை திரௌபதி அம்மன் ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment