தமிழக முதலமைச்சர் கோப்பை 2023, அரசு ஊழியருக்கான கபடி விளையாட்டு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 17.7.2023 தேதி முதல் 21.7.2023 தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்டம் காவல்துறை சார்பில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆயுதப்படை தலைமை காவலர்கள் கதிரவன், முரளி, ஞானமுருகன் மற்றும் முதல் நிலை காவலர் குணசேகர், காவலர்கள் புஷ்பராஜ், குமரவேல், அருள் பாண்டியன், சந்திரகுமார் , மாயவேல், தேவநாதன், ஜவஹர் விவேக் (எஸ்.பி.ஐ) ஆகிய கபடி விளையாட்டு வீரர்கள் பங்கேற்று 3 ம் இடத்தை பிடித்து, வெண்கல பதக்கம் மற்றும் ரூபாய் 3 லட்சம் பரிசு பெற்றனர்.
பரிசு பெற்ற காவல்துறை கபடி வீரர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வன், பயிற்சியாளர் தனசேகரன் அணி மேலாளர் கோவர்த்தனன் ஆகியோர்கள் உடனருந்தார்.
No comments:
Post a Comment