கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணி 26 ஆம் தேதி நெல்வயல்களில் ஜேசிபி எந்திரங்களை இறக்கி நடைபெற்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 27 ஆம் தேதியும் நடைபெற்ற அப்பணி 28 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 29ஆம் தேதியான இன்று காலை 8 மணி வரை பணிகள் ஏதும் நடைபெறாத நிலையில் திடீரெனசில ஜேசிபி எந்திரங்கள் வளையமாதேவி கிழக்குப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட கிராமத்தினர் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் என்எல்சி நிறுவன அதிகாரிகளோஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு வெட்டப்பட்ட பரவனாறு வாய்க்கால் பணியில் உள்ள மண் மேடுகளை சமன்படுத்தும் தொடர் பணியில் மட்டும்தான் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விவசாயப் பயிர்கள், நெல் விளைந்துள்ள வயல்கள் உள்ள நிலப்பகுதிக்கு தற்போதைக்கு தாங்கள் செல்ல மாட்டோம் என்றும் கூறுகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் என்எல்சி நிறுவனத்தார் கஷ்டப்பட்டு பிள்ளையை வளர்ப்பது போல் நெல்மணிகளை வளர்த்த விவசாயிகளின் பயிர்களுக்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.
No comments:
Post a Comment