கடலூரில் இராமலிங்கம் அடிகளார் வள்ளலார் 200-ம் ஆண்டு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கடலூர் தேரடி தெருவில் இன்று மாலை 6 மணிக்கு கடலூர் மாநகர செயலாளர் ஆர் அமர்நாத் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பக்கிரான், ஆளாவந்தார், கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் வரவேற்பு நிகழ்த்தினார், மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், உதயகுமார், கருப்பையா, சுப்பராயன், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
சிப்காட் செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார், அறிவியல் கலைக்குழு தப்பாட்டம் - பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment