ஸ்ரீரங்கம் ரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் முகநூலில் தவறாக பதிவிட்டவர் மீது பாஜக சார்பில் போலீசில் புகார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 July 2023

ஸ்ரீரங்கம் ரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் முகநூலில் தவறாக பதிவிட்டவர் மீது பாஜக சார்பில் போலீசில் புகார்.


கடலூர் பாரதிய ஜனதா கட்சி இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் நிர்வாகிகள் கடலூர் காவல்துறை கண்காணிப்பாளிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் மகிழ் வெண்மணி என்பவர் தனது முகநூல் பதிவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கியால் பிளக்கும் நாள் என்னாளோ? என்று படத்துடன் கூடிய பதிவினை பதிவிட்டிருந்தார். 


இது இந்து மக்களின் கோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும் இருப்பதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய் சுரேஷ், முன்னாள் ராணுவ பிரிவு மாநில துணை தலைவர்  பாலசுப்பிரமணியம் ஆகியோர் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.  


பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளர் இரா. அரங்கநாதன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பி.எஸ்.ஆர்.பாஸ்கரன், இதர பிற்ப்படுத்தபட்டோர் அணி ஊடக பிரிவு மாநில தலைவர் பொன் சதீஷ்குமார் , மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் அனல் அன்பரசன் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment