கடலூரில் நெய்தல் கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 July 2023

கடலூரில் நெய்தல் கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி.


கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு கடலூர் மண்டல இயக்குனர் டாக்டர். ஆர் .மோகன் தலைமை தாங்கினார். இந்த கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட் ராட் கில்லர் பாக்ஸர் அமெரிக்கன் புள்ளி கிரேடன் உள்ளிட்ட பல்வேறு ரக நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன. 




கண்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாய்களுக்கு சிறப்பு விருந்தினராக கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கண்காட்சியில் சேம்பியன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கன் புள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. உரிமையாளர் ஆத்மா அவர்களுக்கு கேடயமும் சான்றிதழம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரபு முன்னிலையில் வழங்கினார். ஒவ்வொரு ரகத்திற்கும் முதல் மூன்று பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறப்பாக பல்வேறு சாசங்கள் நிகழ்த்திக்காட்டிய காவல்துறைக்கு சான்றிதழ்கள் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

கண்காட்சி தேர்வாளராக புதுவை மாநில மருத்துவர் குமரன் பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் ராஜேஷ் குமார், விருத்தாச்சலம் உதவி இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் மோகன் குமார், கால்நடை உதவி மருத்துவர்கள் நடராஜன், சுந்தரம், ஸ்டாலின் வேதமாணிக்கம், வானதி, சேதுபதி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், கண்காட்சிப் பணிகளை மேற்கொண்டனர். 

No comments:

Post a Comment

*/