சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது இதனை குமராட்சி தீயணைப்பு நிலைய குழுவினர் தீயை அணைத்தனர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 July 2023

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது இதனை குமராட்சி தீயணைப்பு நிலைய குழுவினர் தீயை அணைத்தனர்


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்த்தாம்பட்டு கிராமத்தில் குளத்து மேட்டு தெரு 1/44 வசிக்கும் மாரியப்பன் இவரின் கூறை வீடானது மின் கசிவு காரணமாக திடீரென 7:00 மணி அளவில் தீப்பிடித்து எறிய தொடங்கியது இதனை அடுத்து குமராட்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது, குமராட்சி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை தீயணைப்பு நிலைய அலுவலர் சி முரளி தலைமையிலான தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து  சுமார் 1 மணி நேரம் தண்ணீரை பீய்த்து அடித்து போராடி தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இதில் 8000 மதிப்பிலான பொருட்கள் சேதம் ஆகி உள்ளது 32,000 மதிப்பிலான பொருட்கள் சேமிக்கப்பட்டன என தகவல் தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

*/