சேத்தியாத்தோப்பு அருகேஎறும்பூர் கிராமத்தில் கடுமையான சேதம் அடைந்த சாலையை சரிசெய்ய கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 July 2023

சேத்தியாத்தோப்பு அருகேஎறும்பூர் கிராமத்தில் கடுமையான சேதம் அடைந்த சாலையை சரிசெய்ய கோரிக்கை.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் பனஞ்சோலை சாலை கடும் சேதமடைந்துள்ளதால் இதனை சரிசெய்ய கிராமமக்கள் கோரிக்கை. வைத்துள்ளனர். எறும்பூர்&சின்னநெற்குணம் கிராமத்திற்கு இடையே வயல்வெளிப்பகுதியில் பனஞ்சோலை சாலை அமைந்துள்ளது. 

இந்த சாலையில் முன்பெல்லாம் கிராமப்புற உழவு வாகனங்கள் தனியார் பேருந்துகள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் என சென்று வந்த சாலையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சாலையானது தற்போது மிகமோசமாக சேதமடைந்துள்ளது. பல வாகனங்கள் சென்று வந்த நிலையில் தற்போது நடந்துசெல்வதற்கே அச்சமேற்படுத்தி வருகிறது.இதனை சீரமைத்து புதிய தரமான சாலை அமைத்து தரவேண்டும் என வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் இவற்றிற்கு கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகிலுள்ள பல கிராமங்களிலிருந்து மாணவர்கள் இவ்வழியாகத்தான் நடந்து வருகிறார்கள்.முக்கியமாக எல்லா இடங்களிலும் மரங்கள் அழிந்து வரும் நிலையில்  இந்த சாலையின் இரண்டுபக்கங்களிலும் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வரிசைக்கட்டினாற்போல் இருந்து வருவதுஇந்த சாலையில் செல்லும் அனைவருக்கும் பழமையை நினைவு படுத்தும் பசுமையான அனுபவமாகவும் இருக்கிறது. 


எனவே இந்த சாலையை தரமான முறையில் புதியதாக அமைத்துத் தருமாறு இப்பகுதி கிராம மக்களும் இந்த சாலையின் வழியாக நடந்து வரும் பள்ளி மாணவர்களும் உரிய அதிகாரிகளுக்கு தங்கள் கோரிக்கையை வைக்கின்றனர். 

No comments:

Post a Comment

*/