சிறை சென்று ஜாமீனில் வந்தவர் மீண்டும் அதே திருட்டு; சோழத்தரம் போலீசாரால் அதிரடி கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 July 2023

சிறை சென்று ஜாமீனில் வந்தவர் மீண்டும் அதே திருட்டு; சோழத்தரம் போலீசாரால் அதிரடி கைது.


கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே வடக்குபாளையம் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் பார்வதி(78) என்ற மூதாட்டி.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் மூதாட்டியிடம்  நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள்  உனக்கு ஐந்தாயிரம் ரூபாய் அரசு பணம்  வந்திருக்கிறது எனவும் நீ காதில் தங்க நகை போட்டிருக்கக் கூடாது.அப்படி போட்டிருந்தால் நீ வசதியாய் இருக்கிறாய் என்று கூறி உனக்கு அரசு பணம் ஐந்தாயிரம் கிடைக்காது என்று அவர்கள் கூற அதை உண்மை என்று நம்பிய மூதாட்டி பார்வதி தான் போட்டிருந்த தங்க நகையை கழட்டி தன்னுடைய மணி பர்சில் வைக்க முயன்றார்.


அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென மணிபர்சோடு நகையை பிடுங்கிச் சென்ற அவர்கள் இருசக்கர வாகனத்தில் மாயமாய் மறைந்தனர். இதுகுறித்து சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் டிஎஸ்பி தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் அப்போது முடிகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (27), மாரிமுத்து (42), ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை பரிமுதல் செய்தனர். இதில்  சரத்குமார் இதே போன்ற நகை திருட்டு சம்பவத்திற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறை சென்றவர்.  


கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமினில் வெளியே வந்தார். மீண்டும் இதே திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஜெயிலில் இருந்து எப்போது வெளியே வந்தாலும் இதையே மீண்டும் மீண்டும் தொழிலாக செய்து வருவதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/