கலந்தாய்வு கூட்டத்தில் மீனவ கிராமங்களின் பிரச்சனை, மீனவர் பிரச்சினை குறித்தும் மீனவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மீனவர்களின் பிரச்சனை குறித்து அரசிடம் எடுத்து கூறி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும், தமிழ்நாடு காவல்துறை சார்பில் மீனவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்து வருவதாகவும், மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திறன் மேம்பாட்டு பயிற்சி காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டு வருவதாகவும் எடுத்து கூறினார். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மீனவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், ஏதேனும் சட்டவிரோத செயல்களைப் பற்றி தகவல் தெரிந்தவுடன் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றபோது அனைத்து அரசு துறையினரும் இணைந்து செயல்பட்டால் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல்துறை இயக்குனர் அவர்கள் எடுத்து கூறினார். மீன்வளத்துறை இணை இயக்குனர் திரு. வேல்முருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார்,ஸ்ரீதரன் (விழுப்புரம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, சுரேஷ்கண்ணன் (க்யூ பிரிவு), இந்திய கடற்படை கமண்டிங் ஆபிசர், காவல் கண்காணிப்பாளர் (புதுச்சேரி மரைன் போலீஸ்) பழனிவேல், கஸ்டம்ஸ் கண்காணிப்பாளர் திரு. சையத் குமார், காவல் ஆய்வாளர் திருமதி. பத்மா, வனத்துறை அதிகாரி பாரதிதாசன், மரைன் என்போஸ்மன்ட் உதவி ஆய்வாளர் திருமதி. சசிகலா, சந்திரன் (விழுப்புரம்), துறைமுக இமிக்கிரேஷன் அலுவலர் கார்த்திகேயன், தமிழ்நாடு கடல் சார் வாரியம் திரு. பாபு, மற்றும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாநில மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment