இவ்வாறான நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வீராணம் ஏரியின் மேற்குப் பகுதி கரைகுடிகாடு கிராமப் பகுதியில் எதிர்பாசன மதகு சேதம் அடைந்தது. இந்த மதகு மூலம் குடிகாடு மற்றும் அதன் சுற்றுப்புற கிராம விவசாயிகள் பாசனம் பெற்று வந்த நிலையில் இந்தப் பாசன மதகு சேதமடைந்ததையடுத்து விவசாயிகள் வைத்த கோரிக்கையின் படி சேதமடைந்த மதகை அகற்றிவிட்டு புதிய பாசன மதகு அமைக்கப்பட்டது. மதகு அமைத்தாயிற்று இனிமேல் பிரச்சனை இல்லை என்று நினைத்த விவசாயிகளுக்கு அதில் ஷட்டர் பொருத்தாமல் போனதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வீராணம் ஏரியில் முழுவதும் நிரம்பும் தண்ணீரானது தானாகவே இந்த மதகு வழியாக வயல்களுக்கு நுழைந்து விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பாசன மதகு தண்ணீரைத் தேவைப்படும் போது திறப்பதற்கும், தேவையில்லாத போது அடைப்பதற்கும் ஷட்டர் பொருத்தவில்லை. இது குறித்து அதிகாரிகளும்மாவட்ட நிர்வாகமும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஷட்டர் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகின்றனர்.
வீராணம் ஏரி முழுகொள்ளளவை எட்டும்போதும் மற்றும் மழை வெள்ள காலங்களிலும் இந்த பாசன மதகில் ஷட்டர் இல்லாததால் தண்ணீர் தானாகவே விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடவும் வாய்ப்புண்டு என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment