கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்ப்பு மற்றும் மனு வாங்கும் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர்கள் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் கலந்து கொண்டனர் முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுவை கொடுத்தார்கள்.
இந்த நிகழ்வில் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நல சங்கத்தின் சார்பில் கடலூர் குறிஞ்சிப்பாடி பண்ருட்டி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த வருவாய் வட்டத்திற்கு உட்பட்டு ஒரே இடத்தில் தேர்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனை பட்டா மற்றும் குடியிருப்புகள் வழங்க வேண்டி கோரிக்கை வைத்தார்கள் உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment