சேத்தியாத்தோப்பு அருகேஎன்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு பரவனாறு வடிகால்வெட்டும் பணிக்காக நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 July 2023

சேத்தியாத்தோப்பு அருகேஎன்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு பரவனாறு வடிகால்வெட்டும் பணிக்காக நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிப்பு.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி சுரங்கம் இரண்டாவது விரிவாக்கப் பணிக்காக புதிய பரவானாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணிக்காக நூற்றுக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.  என்எல்சி கனரக வாகனங்கள் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள், கிராம பொதுமக்கள் சமகால இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு என்று கோரிக்கை வைத்துள்ள நிலையில் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

வளையமாதேவி கிராமப்பகுதியில் என்எல்சி புதிய பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டுவதால் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் மேலும் இந்த புதிய பரவனாறு வடிகால் வாய்க்கால்  விவசாயநிலங்களில் விளைந்துள்ள நெற்கதிர்கள் வழியாக வெட்டப்படுவதால் விவசாயிகளும் கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதனால் இப்பகுதி மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். ஆளுங்கட்சியினர் இது குறித்து எதுவும் கண்டுகொள்ளாததால் தாங்கள் தனித்துவிடப்பட்டதாக கிராம மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர். தற்போதைய  அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை என்று கோரிக்கை வைத்து என்எல்சிக்காக போராடியது. ஆனால் தற்போது அதே  அரசு ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது இப்பகுதி மக்களுக்காக என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பேசத்தயங்குவதுஏன் என்று என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் சோகத்துடன. கூறுகின்றனர். தற்போதுஇப்பிரச்சனை இந்தப் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

*/